தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இறுதிவரைக்கும் போராடு!

இறுதிவரைக்கும் போராடு!

இறுதிவரைக்கும் போராடு!


ADDED : மார் 05, 2012 01:03 PM

Google News

ADDED : மார் 05, 2012 01:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தம்பதிகள் சிவன்- பார்வதி போலவும், விஷ்ணு- லட்சுமி போலவும் வாழ வேண்டும். மனைவி மனம் நோகும்படி பேசக்கூடாது.

* தெய்வத்தன்மை எளிதில் ஏற்படுவதற்கு மனதில் பயம், கபடம், பகை இல்லாத தூய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* இறைவன் மீது பாரத்தைப்போட்டுவிட்டு வாழ்ந்தால் இறைவன் தன் அருளைத் தருகிறார். இவர்களுக்கு கிடைக்கும் பயன் உலகத்தார் வியக்கும்படியாக இருக்கும்.

* வாழ்க்கையில் ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டால் வெற்றி உண்டாகும் வரை, கண்ணும் கருத்துமாக பாடுபட வேண்டும்.

* அறிவுத் தெளிவைத் தவறவிடாமல், ஓயாமல் தொழில் செய்து கொண்டிருந்தால் அது நல்லதாக முடியும்.

* தெய்வத்தை நம்பிவிட்டு நாம் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us